பகுதி நேர பி இ படிப்பு

தயாராகி விட்டீர்களா? பகுதிநேர பி.இ., படிப்பு 

பணிபுரியும் இளைஞர்களும் இன்ஜி னியரிங் படிக்க உதவும் வகையில், பகுதிநேர பி.இ., படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது. வளாகங்கள்: இந்த சுயநிதி படிப்பானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத் திற்கு உட்பட்ட காலேஜ் ஆப் இன்ஜி னியரிங், கிண்டி மற்றும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய இரண்டு வளாகங்களில் வழங்கப்படுகிறது. 

துறைகள்: 

கிண்டி காலேஜ் ஆப் இன்ஜி னியரிங்கில் மெக்கானிக்கல் இன்ஜினிய ரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய மூன்று படிப்புகளும், மெட்ராஸ் இன்ஸ் டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மெக்கா னிக்கல் இன்ஜினியரிங் படிப்பும் வழங்கப்படுகிறது. படிப்பு காலம்: 7 செமஸ்டர்களுடன் மூன்றரை ஆண்டுகள் வகுப்பு நேரம்: வார வேலை நாட்களில் மாலை 6:15 முதல் 9:15 மணி வரை வகுப்புகள் நேரடியாக நடத்தப்படும். தகுதிகள்: ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக் கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறி யியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த பிரிவில் பெறப்பட்ட மூன்று ஆண்டு டிப்ளமா படிப்பு; மேலும், துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகளுக்கு மூன் டிப்ளமா முடித்திருக்க வேண்டும். கல்வி நிறுவனத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிற்குள் தமிழகத்தில் பணிபுரிபவராக இருப்பதும், போதிய உடல் தகுதியும் அவசியம். வயது வரம்பு: பி.இ., பகுதி நேர படிப் பில் சேர உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: 

https://admissions/annauniv.edu/ptheapp2021 வாயிலாக ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான கல்வி சான்றிதழ்களுடன் தற்போது பணிபுரிவதற்கான ஆவணத் தையும் சமர்ப்பிக்க வேண்டும். சேர்க்கை முறை: மதிப்பெண் அடிப்படை யில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப் பட்டு, 'ஆன்லைன்' வாயிலான கலந்தாய் வில் தகுதியான இடங்கள் ஒதுக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 24 விபரங்களுக்கு: https://admissions.annauniv.edu/cfal

Post a Comment

Previous Post Next Post

Search here!