தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நிரந்தர பேராசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுடன் இணைந்து தற்காலிக அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். 

 அவ்வாறு பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு நிரந்தர பேராசிரியர்களுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படாமல், அவர்களுக்கு நிகரான வேலை மட்டும் வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் பல காலங்களாக எழுப்பப்பட்டு வருகின்றன.

READ THIS ALSO : பொங்கல் பண்டிகை: டிக்கெட் முன்பதிவு மையம் மதியம் 2 மணி வரை இயங்கும்
  இந்த நிலையில் சமவேலைக்கு, சம ஊதியம் வழங்குவது, பேராசிரியர்களில் ஆண்-பெண் என்ற பாலின பாகுபாடு பார்க்கப்படுவது தொடர்பாக மாநில கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பப்பட்டு இருக்கிறது. 


அந்த புகாரை பார்த்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக 30 நாட்களுக்குள் பதில் அளிக்க மாநில உயர்கல்வித் துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து உயர்கல்வித் துறை அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post

Search here!