ஈர நிலம் புகைப்படப் போட்டி:
பங்கேற்க வனத் துறை அழைப்பு
திருச்சி, ஜன. 12: திருச்சி மாவட்டத்தில் நடைபெறும்ஈர நிலம்தொடர்
பான புகைப்படப் போட்டியில் தகுதியான அனைவரும் பங்கேற்க
வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு வனத் துறையின் மூலம் பிப். 2-ஆம் தேதி ஈர நிலங்கள்
பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழா திருச்சி மாவட்டத்
தில் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தமிழ்நாடு
மாநில ஈர நில ஆணையம் ஆகியோரது அறிவுறுத்தலின்படி நடத்தப்
படவுள்ளது.
இந்த விழாவின் ஒரு பகுதியாக வரும் 18ஆம் தேதி முதல் 24ஆம்
தேதி வரை இணைய தளம் மூலம் நடைபெறும் ஈர நிலம் தொடர்
பான மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டியில் பங்கேற்க
லாம். பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஈர
நில நண்பர்கள் மற்றும் ஏனையோர் தங்களது புகைப்படங்களை
மற்றும் பதிவுகளை வரும் 24ஆம் தேதி மாலை 5 மணிக்குள் Google
form https://forms.gle/6xWFy2tNJQ4PWBYq5 என்ற முகவரிக்கு
அனுப்ப வேண்டும்.
இப் போட்டியில் முதல் மூன்று இடம் பெறுவோரை மாவட்ட
அளவில் ஆட்சியரின் தலைமையிலான தணிக்கைக் குழு தேர்வு
செய்ய உள்ளது. பரிசளிப்பு விழா பின்னர் அறிவிக்கப்படும் என
மாவட்ட வனத் துறை அலுவலர் ஜி. கிரண் தெரிவித்தார்.
No comments:
Post a Comment