தைப்பூச நாளில் பத்திர பதிவு உண்டு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 13 January 2022

தைப்பூச நாளில் பத்திர பதிவு உண்டு

 தைப்பூச நாளில் பத்திர பதிவு உண்டு



தைப்பூசத்தை முன்னிட்டு, வரும் 18 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் முகூர்த்த நாட்கள் போல, தமிழ் வருட பிறப்பு, ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு செய்ய மக்கள் விரும்புகின்றனர்.இதை கருத்தில் வைத்து, 2021ல் ஏப்., 14, ஆக., 3, தைப்பூச நாளான 2022 ஜன., 18 ஆகிய நாட்களில் சார் -- பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என, 2021 ஏப்ரலில் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், தைப்பூச நாளான வரும் 18 அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அந்த நாளில் காலை 10:00 மணி முதல் சார் - பதிவாளர் அலுவலகங்கள் திறந்து இருக்க வேண்டும்; பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.விடுமுறை நாள் பத்திரப்பதிவுக்கான கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவும் பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment