கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மழை
கடலோர மாவட்டங்களில், இன்று முதல் 17ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என, கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்திக்குறிப்பு: கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்.கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும், 16, 17ம் தேதிகளில் மிதமான மழை பெய்யும்.
மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.சென்னையில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்சம் 31 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், உசிலம்பட்டி, வெள்ளகோவிலில், 3 செ.மீ., பேரையூர் மற்றும் மதுக்கூரில், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மீனவர்கள் வழக்கம்போல கடலுக்கு செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment