ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவுகளை மாணவர்களுக்கு அடையச்செய்வதற்கான திறன் வலுவூட்டல் பயிற்சி வழங்குதல் செயல்முறைகள்

கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கிருஷ்ணகிரி மாவட்டம் அவர்களின் செயல்முறைகள் முன்னிலை: திருமதி.கா.பெ.மகேஸ்வரி, எம்.ஏ.,பி.எட், ந.க.எண் 184/பயிற்சி/ஒபக/2021 நாள்: .01.2022 பொருள்: பயிற்சி தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவுகளை மாாணவர்களுக்கு அடையச் செய்வதற்கான திறன் வலுவூட்டல் பயிற்சி வழங்குதல் அறிவுரை வழங்குதல் - தொடர்பாக, பார்வை: ஆணையர், பள்ளிக் கல்வி ஆணையரகம், சென்னை-6 அவர்களின் கடித ந.க.எண்.2411/D2/2021 நாள்:06.12.2021. (ORN 


பார்வையில் காணும் கடிதத்தில், தமிழ்நாட்லுள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடவாரியான, மாநில பாடத் திட்டத்திற்கான கற்றல் அடைவுகளை (Learning Outcomes) மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு அயைச் செய்வதற்கான கற்பித்தல் முறைகள் குறித்தும் ஏற்கனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது சார்ந்து ஆசிரியர்களுக்குள்ள சந்தேகங்களை நிவர்த்திக்கும் பொருட்டும், ஒவ்வொரு பாடத்திற்குமான கற்றல் அடைவுகளை எங்ஙனம் மாணவர்களுக்கு அடையச் செய்வது என்பது குறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட்டல் பயிற்சி வழங்குவது இன்றியமையாததாகிறது என தெவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் கொண்டு 10.01.2022 முதல் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் (Hi-Tech Lab) அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பயிற்சி வழங்குதல் வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் (பொ) மேற்பார்வையாளர் இணைந்து ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கேற்ப பயிற்சியில் பங்கேற்கும் விவரம் பிரித்து வழங்கப்பட்டு, இவ்விவரத்தினை ஆசிரியர்களுக்கு முன்கூட்டிய தெரிவித்தல் வேண்டும். 

மேலும், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை கையாளும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பள்ளியில் கையாளும் பாடம் சார்ந்த பயிற்சி நாட்களில் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: 

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் போது பள்ளியிலுள்ள மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கையை இரண்டாகப் பிரித்துக்கொண்டு பயிற்சியில் பங்கேற்கச் செய்தல் வேண்டும். ஒரு குழு பயிற்சியில் ஈடுபடும் போது மற்றொரு குழு பள்ளிச் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு மு தல் ஒன்பதாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர் கற்பிக்கும் பாடத்திற்கான கற்றல் அடைவுப் பயிற்சி நடைபெறும் நாளில் பங்கேற்கச் செய்தல் வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பயிற்சி நடைபெறுவதை உற்று நோக்குவதுடன் தங்களது முதன்மைப் பாடம் சார்ந்த கற்றல் அடைவு 
 வலுவூட்டல் பயிற்சி நடைபெறும் நாட்களில் அவர்கள் முழுமையாக அப்பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பார்வை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பயிற்சிக்கான கால அட்டவணை முறையாக பின்பற்றி அனனத்து ஆசிரியர்களும் பயிற்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். பயிற்சி நடைபெறும் மையத்தின் Hi-Tech Lab In-charge ஆசிரியர் இப்பயிற்சி முடியும் வரை ஆசிரியர்களுடன் ஒருங்கிணைந்து, எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் சிறப்பான முறையில் நடைபெற அனைத்து முன் ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இப்பயிற்சியானது உயர் தொழிற்நுட்ப ஆய்வகத்திலிருந்து மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சியில் கலந்துக்கொள்ளும் ஆசிரியர்கள் அனைவரும் உரிய நேரத்திற்கு Hi-Tech Lab மையத்திற்கு வருகை புரிந்து, அமர்வு முடியும் வரை இருத்தல் வேண்டும். மேலும், தமிழக அரசு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) தவறாமல் பின்பற்றி பயிற்சியானது நடத்தப்படுதல் வேண்டும். Hi-Tech Lab In-charge Teacher, Participant Teachers, District Officials for Monitoring ஆகியோர் பயிற்சி சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதுடன், ஆசிரியர் பயிற்றுநர்கள் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஒருங்கிணைத்து வருகைப் பதிவினை (பொ) மேற்பார்வையாளர்கள் மூலம் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அந்தந்த பள்ளி பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சி நடைபெறும் மையத்தில் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். பயிற்சி மையங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், குறுவள மைய தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், (பொ) மேற்பார்வையாளர்கள், மாவட்ட / கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர்கள் தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. 

இணைப்பு: பார்வை கடிதம் 

நகல்: ஒப்பம் (----------/) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, கிருஷ்ணகிரி மாவட்டம். பெறுதல் 1.அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்துக்கொள்ள தொடர் நடவடிக்கைக்காக. 2.அனைத்து உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் - Hi-Tech Lab தயார் நிலையில் வைக்கும் பொருட்டு. 3.அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்துக்கொள்ள தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு. 4. அனைத்து வட்டார வள மைய (பொ) மேற்பார்வையாளர்கள். 

நகல்: 1. பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி ஆணையரகம், சென்னை-6 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 2. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-6 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 3. முதன்மைக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி அவர்களுக்கு தகவலின் பொருட்டு அன்புடன் அனுப்பலாகிறது. 4. முதல்வர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், கிருஷ்ணகிரி அவர்களுக்கு தகவலின் பொருட்டு அன்புடன் அனுப்பலாகிறது.




Post a Comment

أحدث أقدم

Search here!