மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயருகிறது - குடியரசு தினத்தில் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 16 January 2022

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயருகிறது - குடியரசு தினத்தில் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் வகையில் பிட்மென்ட் காரணி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் வகையில் பிட்மென்ட் காரணியை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக அதிகரிக்க உள்ளது. 

அதுபோல் மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயருகிறது. அடிப்படை சம்பளம் உயர்வதால், அகவிலைப்படியும் 31 சதவீதம் அளவில் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அது தற்போது ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு குடியரசு தினத்தையொட்டி வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment