ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 7 January 2022

ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட இருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை www.erode.nic.in என்ற ஈரோடு மாவட்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டரகம், 6-வது தளம், ஈரோடு -642011 என்ற முகவரிக்கு வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424 -2261405 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்

No comments:

Post a Comment