பூசாரிகள் ஓய்வூதியம் உயர்வு - EDUNTZ

Latest

Search here!

Friday, 14 January 2022

பூசாரிகள் ஓய்வூதியம் உயர்வு

கிராமக் கோவில் பூசாரிகள், ஓய்வு பெற்ற ஓதுவார்கள், அர்ச்சகர்கள், இசைக் கலைஞர்கள், வேதபாராயணர்கள், அரையர்கள், திவ்வியபிரபந்தம் பாடுவோர் ஆகியோரின் ஓய்வூதியத்தை, உயர்த்தி வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில், 20 ஆண்டுகள் பணிபுரிந்து, 60 வயதைக் கடந்த ஓய்வு பெற்ற கிராமக் கோவில் பூசாரிகள் ஓய்வூதியம், 3,000 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால், மாநிலம் முழுதும், 1,804 கிராமப் பூசாரிகள் பயன் பெறுவர். 

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓதுவார்கள், அர்ச்சகர்கள், இசைக் கலைஞர்கள், வேதபாராயணர்கள், அரையர்கள், திவ்விய பிரபந்தம் பாடுவோர் ஓய்வூதியம், 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 100 பேர் பயன்பெறுவர்.உயர்த்தப்பட்ட ஓய்வூதி யத் தொகையை, தலைமைச் செயலகத்தில், 10 பயனாளிகளுக்கு, முதல்வர் வழங்கினார். அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment