மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் செயற்கை நுண்ணறிவு குறித்து இணையதளம் மூலம் கல்வி கற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடுமலை, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கு.கண்ணபிரான் கூறியதாவது:- 

செயற்கை நுண்ணறிவு கல்வி மத்திய அரசின் கல்வி அமைச்சகம், இணையதளம் மூலம் செயற்கை நுண்ணறிவு குறித்து கல்வி கற்கலாம் என்று தெரிவித்துள்ளது. அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு என்பது செயற்கை நுண்ணறிவு பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சுய கற்றல் இணையவழித் திட்டமாகும். செயற்கை நுண்ணறிவு பற்றிய அடிப்படை புரிதலைப் பெற்று அதுபற்றி பகிர்ந்து கொள்ள உதவுவதே இந்ததிட்டத்தின் நோக்கமாகும். 

மாணவர், பெற்றோர், எந்தவொரு துறையையும் சார்ந்த தொழில் வல்லுனர், யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்கலாம். இது இணையவழியில் நடைபெறும் ஒரு சுய கற்றல் அனுபவமாக விளங்குகிறது. இதில் 2 பிரிவுகள் உள்ளன. இந்த 2 பிரிவுகளையும் 4 மணி நேரத்தில் முடித்து விடலாம். ஒவ்வொரு பிரிவின் முடிவும் எளிமையான வினாடி வினாவுடன் முடிவடையும். 

இணையவழி இந்தபயிற்சி இணையவழியில் தமிழ், ஆங்கிலம் உட்பட 11 இந்திய மொழிகளில் நடைபெறுகிறது. ஸ்மார்ட்போன், மடிக்கணினி அல்லது கணினியைப் பயன்படுத்தி இந்த இணையவழி படிப்பில் பங்கேற்கலாம். இந்தபடிப்பில் கலந்து கொள்வதன் மூலம் செயற்கை நுண்ணறிவு பற்றியும், அதன் பயன்பாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். பல்வேறு தொழில்துறைகளில் இந்த செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும் அறிந்து கொள்ள முடியும். 

வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இது போன்ற புதிய தொழில் நுட்பங்களை ஆசிரியர்கள், மாணவர்கள் அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இந்த திட்டம் அமைந்துள்ளது. இந்த இணையவழிப்படிப்பில் பங்கேற்கும் அனைவருக்கும் 2வகையான இணையவழி பேட்ஜ்கள் தரப்படுகிறது. இதில் பங்கேற்க https://ai-for-all.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!