கல்வி நிறுவனங்களுக்கு சி.எம்.டி.ஏ., அழைப்பு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 14 January 2022

கல்வி நிறுவனங்களுக்கு சி.எம்.டி.ஏ., அழைப்பு

 கல்வி நிறுவனங்களுக்கு சி எம் டி ஏ அழைப்பு

சென்னை பெருநகர் பகுதியில், நிலங்களின் மதிப்பு மற்றும் மக்கள் அடர்த்தி குறித்து ஆய்வு மேற்கொள்ள, கல்வி நிறுவனங்களுக்கு சி.எம்.டி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது.உலக வங்கி நிதி உதவியுடன், தமிழகத்தில் வீட்டுவசதி, வாழ்விட மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.சென்னை பெருநகரில் நிலங்களின் மதிப்பு, மக்கள் அடர்த்தி, சுற்றுச்சூழல் பாதிப்பின் தாக்கம், போக்குவரத்து நெரிசல் குறித்த ஆய்வு அறிக்கைகளை தயாரிக்க வேண்டும். 

இதற்கான பணிகளை சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.இதில் முதல்கட்டமாக, சென்னையில், நிலங்களின் மதிப்பு, மக்கள் அடர்த்தி குறித்த ஆய்வு மேற்கொண்டு புள்ளிவிபர அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான வல்லுனர்களை தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.இந்த பணிகளில் பங்கேற்க கலந்தாலோசனை நிறுவனங்கள் மட்டுமல்லாது, கல்வி நிறுவனங்களும் பங்கேற்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது. அண்ணா பல்கலை, சென்னை ஐ.ஐ.டி., உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இதில் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment