இந்திய மாணவர்கள் உருவாக்கிய... பி.டி.எப். கோப்புகளை ஆடியோவாக மாற்றும் செயலி..! - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 8 January 2022

இந்திய மாணவர்கள் உருவாக்கிய... பி.டி.எப். கோப்புகளை ஆடியோவாக மாற்றும் செயலி..!

ஜெய்ப்பூர் என்ஜினீயரிங் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் படிக்கும் மாணவர், திவாங் பரத்வாஜ் கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். 

அந்த செயலி, பி.டி.எப்.கோப்புகளை, ஆடியோவாக (குரல் மொழியாக) மாற்றி கொடுக்கும். அதாவது ஆங்கிலத்தில் அல்லது மற்ற மொழியில் இருக்கும் ஒரு பி.டி.எப். பைலை ஆடியோவாக மாற்றி, அதுவும் தாய்மொழியில் ஆடியோவாக மாற்றி கேட்டுக்கொள்ளலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், குஜராத்தி மற்றும் இந்தி என 6 இந்திய மொழிகள் உட்பட மொத்தம் 32 மொழிகளில் இந்தச் செயலி மூலம் பி.டி.எப். பைல்களை ஆடியோவாக மாற்றலாம். ஜாவா, ஹெச்.டி.எம்.எல், சி.எஸ்.எஸ். 

பைதான் மற்றும் ப்லட்டர் ஆகிய மென்பொருட்களை பயன்படுத்தி, தன்னுடைய நண்பர் குணால் சிங்குடன் இந்த செயலியை உருவாக்கி உள்ளார். ‘‘செயலியை மேம்படுத்துவதற்காக தினந்தோறும் பணிகளைச் செய்துகொண்டே இருக்கிறோம். குறிப்பாக மொழிபெயர்த்தலில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஏனென்றால் ஒரு வார்த்தை தவறாக மாறி மொழிபெயர்ந்துவிட்டாலும் மொத்த அர்த்தமே மாறிவிடும். 

இந்தச் செயலியை நாங்கள் கண்டுபிடித்ததே அர்த்தமற்றதாக மாறிவிடும். அதனால் துல்லியமாக மொழிபெயர்த்தல் செய்வதற்கு செயலியை தொடர்ந்து மேம்படுத்துகிறோம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போதுதான் இந்தத் திட்டம் எங்களுக்குத் தோன்றியது. அப்போது யாரும் கல்லூரிக்குச் செல்லமுடியாமல் ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. 

புத்தகத்தையும், எங்களது நோட்ஸ்களையும் பி.டி.எப். பைல்களாக பகிர்ந்துகொண்டோம். அதை எப்படி ஆடியோவாக மாற்றுவது என எண்ணி அதற்கான செயலியை இணையத்தில் தேடினேன். அப்படி ஒரு செயலி இல்லை என்பதை அறிந்து இந்தப் புதிய செயலியை உருவாக்கினேன். 


நண்பர்களும் எனது முயற்சிக்கு மிகுந்த ஒத்துழைப்பையும், ஊக்கத்தையும் கொடுத்தனர். இந்த செயலியை மேலும் மேம்படுத்தி முழுமையான வடிவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்” என திவாங் பரத்வாஜ் தெரிவித்தார். பி.டி.எப். பைல்களை எப்படி ஆடியோவாக மாற்றுவது என எண்ணி அதற்கானசெயலியை இணையத்தில் தேடினேன். அப்படி ஒரு செயலி இல்லை என்பதை அறிந்து இந்தப் புதிய செயலியை உருவாக்கினேன்.

No comments:

Post a Comment