பள்ளிகள் மின் கட்டணம் அரசே செலுத்த கோரிக்கை
அரசு பள்ளிகளின் மின் கட்டணத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இச்சங்க மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் பீட்டர்ராஜா தலைமையில் இணையவழியில் நடந்தது.
பொதுச் செயலர் ராஜு வரவேற்றார். பொருளாளர் அன்பரசன், அமைப்பு செயலர் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனைத்து அரசு உயர், மேல்நிலை பள்ளிகளிலும் துப்புரவு பணியாளர், இரவு காவலர்களை நியமிக்க வேண்டும். உயர்நிலை பள்ளிகளில் எட்டு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அரசு பள்ளிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். அனைத்து மண்டல தணிக்கை அலுவலகங்களையும், முதன்மை கல்வி அலுவலகத்துடன் இணைக்க வேண்டும்.
மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் 5:2 என்ற பழைய நடைமுறையே தொடர வேண்டும்.
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வின் போது, மனமொத்த மாறுதலுக்கான உத்தரவுகளையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment