நாலாயிரம் திவ்ய பிரபந்தம் திட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 21 January 2022

நாலாயிரம் திவ்ய பிரபந்தம் திட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

நாலாயிரம் திவ்ய பிரபந்தம் திட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு SOURCE NEWS

திருமலை, ஜன.20: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்ப வர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்ப நாடு முழுவ தும் உள்ள ஸ்ரீவைஷ்ணவ பிராமணர்களிடமிருந்து விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டிற்கான பகுப்பு-1, 2 தேர்வா ளர்களாக பணியாற்றத் தகுதியுடையவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்ட ஸ்ரீவைஷ்ணவ கோயில்களில் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்ய வேண்டும். 

இதற்காக 'www.tirumala.org' என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 25ம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் சிறப்பு அலுவலர் அலுவலகம், நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாராயணம் திட்டம், ஆழ்வார் திவ்ய பிரபந்தம் திட்டம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், சுவேதா பவன், திருப்பதி-517502 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இதர விவரங்களை அலுவலக நேரத்தில் 0877-2264519 என்ற எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment