எதிர்கால தேவைகக்கு சேமித்து வைப்பதற்கு பலரும் தேர்ந்தெடுக்கும் முறை முதலீடுகள்.
இந்த முதலீடு எந்த வகையானதாகவும் இருக்கலாம்.
உங்களுக்கு பொருத்தமான முதலீட்டை தேர்வு செய்
வதில் தொடங்கி, அதை முழுமையாகப் பூர்த்தி செய்வது
வரை பலவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது
முக்கியமானது.
இவ்வாறு செய்வதில், பல்வேறு சிக்கல்
கள் எழக்கூடும். அவற்றைக் கடந்து முதலீட்டை வெற்றி
கரமாக கையாள்வதைப் பற்றி பார்க்கலாம்.
அதிக வாய்ப்புகளைத் தேடாதீர்கள்:
எந்த முதலீடாக இருந்தாலும், குறிப்பிட்ட கால
இடைவெளியில், அதை நிறைவேற்றுவதாக இருக்க
வேண்டும்.
சில சமயங்களில், எதிர்பாராத செலவுகள்
ஏற்படும்போது, தவணைத் தொகையை செலுத்துவதில்
சிக்கல் வரலாம். அடுத்து வரும் தவணைகளைக்கூட
செலுத்துவதற்கு மறந்து போகும் நிலையும் ஏற்படலாம்.
எனவே, முதலீடுகளை வசதிக்கேற்ப ஒன்றிரண்டாக
தேர்வு செய்வது சிறந்தது.
குறுகிய காலத்திட்டமாக இருத்தல்:
சிலர், தொலைநோக்கு சிந்தனை என்ற பெயரில்,
நீண்ட கால முதலீட்டுத் திட்டத்தை தேர்வு செய்
வதுண்டு. இவற்றில் தவணை செலுத்தும் காலமும்
பல வருடங்கள் நீண்டிருக்கும்.
இதற்குள், நம் நிதி
நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இதன்
விளைவாக முதலீட்டிற்கான முழுப் பயனும் நமக்குக்
கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே, முத
லீட்டை நம் வருமானத்திற்கு ஏற்ப குறுகிய காலத்
திட்டமாகக் கணக்கிடுவது சிறந்தது.
ஆலோசனை பெறுதல் அவசியம்:
எந்த முதலீடு செய்வதாக இருந்தாலும், அதில்
வழங்கப்படும் சலுகைகள், எதிர்காலத்தில் கிடைக்கக் கூடிய சலுகைகள், முதலீட்டு காலம் நிறைவடைந்த
வுடன் பணம் பெறும் வாய்ப்புகள் என அனைத்தையும்
தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், இதில் ஏதேனும்
மறைமுக விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளதா, திட்டம்
சார்ந்த ஆவணங்கள் எவை என அனைத்தையும்
தெரிந்துகொள்ள வேண்டும். இது குறித்த விழிப்
புணர்வு கிடைக்காவிட்டால், சிறந்த நிதி ஆலோசகரிடம்
நீங்கள் செய்ய விரும்பும் முதலீட்டிற்கான சந்தை
நிலவரம் தற்போது எப்படி உள்ளது என்று ஆலோசனை
பெறுவது கட்டாயம்.
நேரமறிந்து முதலீடு செய்தல்:
சிலர் ஆர்வத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல்
முதலீடு செய்வதுண்டு. இது பங்குகளாக இருக்கும்
பட்சத்தில், சந்தை நிலவரம் எப்போது வேண்டுமானா
லும் ஏற்ற, இறக்கத்தை அடையலாம். அத்தகைய சூழ
லில், முதலீடு செய்வதைச் சற்று நிறுத்தி வைப்பது
சிறந்தது.
சரியான நேரத்தில் பங்குகள் உச்சம் அடையும்
எனத் தெரிந்தால் மட்டும், அந்த சமயத்தில் பங்கு
களை வாங்கலாம். இல்லாவிடில், முதலீடு செய்யும்
எண்ணத்தைச் சற்றே ஒத்தி வைப்பதன் மூலம், பெரும்
இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
தேர்வில் கவனம்:
முதல்முறையாக முதலீட்டில் ஈடுபடும்போது, பங்கு
களாக இருந்தாலும், பத்திரமாக முதலீடு செய்தாலும்,
முதலில் நீங்கள் தேர்வு செய்த நிறுவனம் நம்பக
மானதா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதில் உள்ள வாடிக்கையாளர்களின் தற்போதைய
நிலை குறித்துக் கருத்து கேட்பது சிறந்தது. அறிவித்த
படி வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளைச் சரியாக
வழங்குகிறதா? என்பதெல்லாம் முன்னரே கவனத்தில்
கொண்டு தேர்வு செய்வது அவசியம். இதனால், நாம்
ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment