தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 8 January 2022

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் திருமணஞ்சேரியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர், தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என இந்த கோர்ட்டு நம்புகிறது. 

மேலும் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான முந்தைய உத்தரவை நிறைவேற்ற இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment