ஆன்லைன் மூலம் ‘அரியர்’ தேர்வு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 25 January 2022

ஆன்லைன் மூலம் ‘அரியர்’ தேர்வு

ஆன்லைன் மூலம் ‘அரியர்’ தேர்வு கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்தநிலையில் எந்தந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன், நேரடி தேர்வு நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி பாலிடெக்னிக் 1, 3, 5-வது செமஸ்டர்களுக்கும், என்ஜினீயரிங் 3, 5, 7 மற்றும் பட்டப்படிப்பு இளநிலை 1, 3, 5-வது செமஸ்டர்களுக்கும் ஆன்லைனில் தேர்வு நடைபெற இருக்கிறது. 

மேலும் முதுகலை பட்டப்படிப்புகளில் 1, 3-வது செமஸ்டர்களுக்கும் ஆன்லைனிலேயே நடத்தப்பட உள்ளது. ஆப்லைன் (நேரடி தேர்வு) தேர்வை பொறுத்தவரையில், இறுதி ஆண்டில் இறுதி செமஸ்டர் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நடைபெறும். அதாவது இளநிலை 6-வது செமஸ்டர் மற்றும் முதுநிலையில் 4-வது செமஸ்டர் எழுதும் மாணவர்களுக்கு, நேரடி தேர்வாக நடைபெறும். 

 அதேபோல் எம்.ஏ., எம்.எஸ்.சி. முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு 1, 3-வது செமஸ்டர்கள் ஆன்லைனில் நடக்கும். எம்.இ. 3-வது செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் நடக்கும். அரியர் தேர்வுகளை பொறுத்தவரையிலும் ஆன்லைனிலேயே நடத்தப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment