இ.எஸ்.ஐ.சி.யில் பணிவாய்ப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 29 January 2022

இ.எஸ்.ஐ.சி.யில் பணிவாய்ப்பு

இ.எஸ்.ஐ.சி.யில் பணிவாய்ப்பு 

இ.எஸ்.ஐ.சி. நிறுவனம் மூலம் ஸ்டெனோகிராபர், கிளார்க், மல்டி டாஸ்க் ஆகிய பதவிகளுக்கான ஆட்தேர்வு நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள இ.எஸ்.ஐ.சி தலைமையகம் மற்றும் 28 பிராந்தியங்களில் மொத்தம் 3992 பேர் நியமிக்கப்பட உள்ளனர். சென்னை பிராந்தியத்தில் கிளார்க் (150), ஸ்டெனோகிராபர் (16), மல்டி டாஸ்க் (219) பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

 15-2-2022 அன்றைய தேதிப்படி கிளார்க், ஸ்டெனோகிராபர் பணி இடங்களுக்கு 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களும், மல்டி டாஸ்க் பதவிக்கு 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. DOWNLOAD SOURCE NEWS HERE

ஸ்டெனோகிராபர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஸ்டெனோகிராபர் பயிற்சி அனுபவமும், கிளார்க் பதவிக்கு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் சார்ந்த அடிப்படை பயிற்சியும், மல்டி டாஸ்க் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். 

முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, கணினி திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-2-2022. விண்ணப்பிப்பது பற்றிய விரிவான விவரங்களை https://www.esic.nic.in/recruitments/ என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.

No comments:

Post a Comment