தவில், நாதஸ்வர ஆசிரியர் தேர்வு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 21 January 2022

தவில், நாதஸ்வர ஆசிரியர் தேர்வு

தவில், நாதஸ்வர ஆசிரியர் தேர்வு  SOURCE NEWS

சென்னை, ஜன. 21- திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவி லில் தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளிக்கான, ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், 35 வயது நிரம்பிய, தமிழில் எழுத, படிக்க மற்றும் இசைக் கருவி களை வாசிப்பதில் சான்றிதழ் பெற்றிருக்க வேண் டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் நடத்தப்படும் தவில், நாதஸ்வர பள்ளிகளில் மூன்றாண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 

வாத்யவிசாரதா சான்றிதழ் வைத்திருப்பவர் களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவருக்கு, 35 ஆயிரம் ரூபாய் மாத தொகுப்பு சம்பளம் வழங்கப்படும். விண்ணப்ப படிவம் கோவில் அலுவலகத்தில் நேரிலோ, hrce.tn.gov.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிப்ரவரி 16ம் தேதிக்குள், 'இணை ஆணை யர், செயல் அலுவலர், சுப்பிரமணிய சுவாமி கோவில், திருத்தணி' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனஹிந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment