✍️ 31, Monday, Jan., 2022
🔹🔸இன்றைய சிந்தனை..
🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️
🧿‘’சேமிப்பும், சிக்கனமும்’’
🏵️❀❀••┈┈•EDUNTZ•┈┈••❀❀🏵️
♻️தேவையில்லாத நேரத்தில் தேவைப் படாத பொருட்களை வாங்குவதால் மற்றவரை நாம் பணக்காரராக உருவாக்கிறோம்;
♻️நாம் அதனால் ஏழையாகிறோம்.தேவைப்படும்போது அதை வாங்க முடியாமல் கவலைப்படுகிறோம்!
♻️கையில் கிரிடிட் கார்டு இருந்தால் போதும் கடைகளில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டில் அடைத்து வைத்து விடுகிறார்கள்.
♻️அதில் பாதிக்குமேல் தேவையே இருக்காது. சும்மா இருக்கட்டுமே என்று வாங்கி வீட்டில் அடைத்து விட்டு, மாதக் கடைசியில் அவசர செலவுக்கு கையில் காசு இல்லாமல் திண்டாடிக் கொண்டு இருப்பார்கள்.
♻️கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரம் ஏதென்ஸ் என்றவுடனே நம் நினைவுக்கு வருபவர் தத்துவ மேதை சாக்ரடீஸ் ..சாக்ரடீஸ் ஒருமுறை ஏதென்ஸ் நகரின் அங்காடித் தெருக்களில் சுற்றிக் கொண்டே வந்தார்.
♻️நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களை எல்லாம் கூர்ந்து கவனித்து கொண்டே வந்தார்...
♻️மறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் நடந்து சென்று விட்டார்.
♻️இப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் சுற்றிப் பார்த்து விட்டுச் சென்று விடுவார்.ஏழாம் நாள் -சாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக்கண்ட ஒரு கடைக்காரர்.,
♻️"அய்யா நானும் கடந்த ஆறு நாட்களாகப் பார்த்துக் கொண்டே வருகிறேன். கடைத் தெரு வழியே வருகிறீர்கள் ,கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கிறீர்கள்,
♻️ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை! உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே?" என்று கேட்டார்.
அதற்கு சாக்ரடீஸ்,,
♻️அன்புள்ளம் கொண்ட கடைக்காரரே ., இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை!
♻️இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே!என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்", என்று கூறினாராம்.,
கடைக்காரர் வியந்து போய் விக்கித்து நின்று விட்டாராம்!
😎ஆம்..! நண்பர்களே.,
🏵️தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கைக்கு சேமிப்பும், சிக்கனமும் எந்த அளவு முக்கியமோ,அதே அளவிற்கு நாட்டின் முன்னேற்றத்திற்கும் அது பயன்படுகிறது.
⚽ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்.
🏵️சிக்கனமான வாழ்க்கைதான் சீரான வாழ்க்கை’
🏵️▬▬▬EDUNTZ▬▬▬🏵️
No comments:
Post a Comment