ஆசிரியர், காப்பாளர்கள் கலந்தாய்வு ஒத்திவைப்பு ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 9 January 2022

ஆசிரியர், காப்பாளர்கள் கலந்தாய்வு ஒத்திவைப்பு ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த பள்ளிகளில் ஆசிரியர், விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆசிரியர், காப்பாளர்களுக்கான கலந்தாய்வு 10 (நாளை), 11 (நாளை மறுதினம்) மற்றும் 12-ந் தேதி (புதன்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாட்களில் நடைபெற இருந்த கலந்தாய்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment