அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வில் புதிய உத்தரவு அரசாணை வெளியீடு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 26 January 2022

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வில் புதிய உத்தரவு அரசாணை வெளியீடு

தமிழக தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி 1.1.2022 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கான தொகை 1.1.2022-ல் இருந்து பணமாக வழங்கப்படும். 1.1.2020 முதல் 31.12.2021 வரையான அகவிலைப்படி 17 சதவீதம் என்ற அளவில் தொடர்ந்து வழங்கப்படும். அதுபோலவே, தமிழகத்தில் உள்ள அகில இந்திய பணியில் உள்ள அதிகாரிகளுக்கும் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டு, 1.1.2022-ல் இருந்து பணமாக வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment