கல்வி ஒளி ஏற்றும் என்ஜினீயர் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 29 January 2022

கல்வி ஒளி ஏற்றும் என்ஜினீயர்

கைநிறைய சம்பளம் வாங்கிய வேலையைத் துறந்துவிட்டு, 48 ஆயிரம் ஏழைக் குழந்தைகள் கல்வி பெற உதவியிருக்கிறார், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது சந்தீப். எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரான இவர், ஐ.டி. நிறுவனத்தில் சேர்ந்து மாதம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார். 


இதில் அவர் திருப்தியடைந்துவிடவில்லை. ஏழைகள் மற்றும் பழங்குடியின குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. குழந்தைகளுக்கு இலவசமாகக் கற்பிப்பதும், அவர்களை நல்ல பள்ளிகளில் சேர்த்து படிக்க உதவுவதும் அவரது முக்கிய பணியாகிவிட்டது. இவரிடம் படித்த ஏழைக் குழந்தைகள் இப்போது என்ஜினீயரிங் மற்றும் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கின்றனர். 

பல குழந்தைகள் இன்றைக்கு வளர்ந்து நல்ல வேலையில் இருக்கின்றனர். அந்த வகையில் இதுவரை 48 ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி அளித்து, அவர்களை உயர்த்தியிருக்கிறார் சந்தீப். இது குறித்து சந்தீப் கூறுகையில், “பெரும்பாலான ஏழைக்குழந்தைகள் உயர் கல்வியைக் கூட எட்டவில்லை என்பதை ஆய்வுகள் மூலம் அறிந்தேன். இதற்கு காரணம் வறுமையே என்பதையும் அறிந்தேன். eduntz.com

அவர்களது பிரச்சினையைப் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதே இதற்கான தீர்வு என்று முடிவு செய்தேன். 50 குழந்தைகளுடன் கிராம மக்கள் உதவியுடன் பள்ளியைத் தொடங்கினேன். அதன் பின்னர் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. சமூக மாற்றம் ஏற்படுத்த விரும்புவோர் எங்களுடன் இணைந்தனர்.
தற்போது மத்தியப் பிரதேசத்தில் பல மாவட்டங்களில் மொத்தம் 982 கிராமங்களில் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்து வருகிறோம். பள்ளிப் படிப்பை முடித்ததும், அடுத்து என்ன செய்வது என்ற கேள்விதான் மாணவர்கள் மத்தியில் எழும். 

அந்தக் கேள்விக்கான விடையையும் மாணவர்களுக்கு நாங்கள் சொல்லித்தந்து வழிகாட்டுகிறோம். இதன் பின்னர் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக படிக்க ஏற்பாடு செய்கிறோம். உயர் கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி கிடைக்கவும் வழி காட்டுகிறோம்.


  எங்கள் பிரச்சாரத்தின் மூலம் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ஏழைக்குழந்தைகளுக்கும் உதவி வருகிறோம். நாங்கள் பல விருதுகளைப் பெற்றுள்ளோம். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் என்னைப் பாராட்டியிருக்கிறார். கிராமப்புற பெண்கள் கடின உழைப்பாளிகள். அவர்கள் வேலை வாய்ப்பு பெறவும் நாங்கள் உதவி வருகிறோம்” என்றார்.

No comments:

Post a Comment