⭕⭕கோவை:'
சாராபாய் ஆசிரியர் - விஞ்ஞானி தேசிய விருது' போட்டியில், கோவை அரசுப்பள்ளி ஆசிரியை யுவராணி இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ஆசிரியர் - விஞ்ஞானி தேசிய கவுன்சில், தொடக்க கல்வி மாணவர்களுக்கு செயல்வழியில் கணிதம், அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் போட்டி நடத்தி விருது வழங்கி வருகிறது. SOURCE NEWS CLICK HERE
⭕⭕நடப்பாண்டுக்கான சாராபாய் ஆசிரியர் - விஞ்ஞானி தேசிய விருது போட்டிக்கு ஆன்லைன் தேர்வு நடத்தி கருத்துருக்கள் பெறப்பட்டன. பின், நேர்காணல் வாயிலாக தகுதியானோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், கோவை, பொம்மனம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை யுவராணி இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
⭕⭕ஆசிரியை யுவராணி கூறுகையில்,''புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க, 250க்கும் மேற்பட்ட, 'அனிமேஷன்' வீடியோக்கள் உருவாக்கியுள்ளேன். கல்வி தொலைக்காட்சியிலும் வகுப்பு எடுத்து வருகிறேன். செயல்வழியில் மாணவர்களுக்கு விளக்கும்போது, மனதில் கருத்துகள் அழியாமல் பதிந்து விடுகிறது. விருதுக்கு தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது,'' என்றார்
❢
◥▬▬▬ ✍🏽JOIN TELEGRAM👨🏻💻▬▬▬◤❢
No comments:
Post a Comment