கார் கழுவும் நிலையங்களில், ஒவ்வொரு இடத்திலும் வாஷிங் கன்பிரஷர் (அழுத்தம்) வேறுபடும். காரின் எந்தெந்த பாகங்களை கழுவும் போது, இது வேறுபடுகிறது என்று பார்ப்போம். 

கார் வாஷிங் பே-யில் வந்து நின்றவுடன் தரை விரிப்புகள் அனைத்தையும் வெளியில் எடுத்து விட்டு பின்பு அனைத்து ஜன்னல் கண்ணாடிகளை மூடிவிட்டு முன்புறத்தில் பானட்டை திறந்து முதலில் என்ஜின் பகுதியில் மிகக் குறைந்த அழுத்தத்தில் வாஷிங் செய்ய வேண்டும். 

ஏன் என்றால் என்ஜின் பகுதியில் அதிக எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் இருப்பதால் அதில் தண்ணீர் சென்று விட்டால் கார் ஸ்டார்ட் ஆகாமல் போக வாய்ப்புகள் அதிகம். எனவே என்ஜின் பகுதியில் வாஷிங் செய்யும் போது அழுத்தம் குறைவாக வைத்து கழுவ வேண்டும். அடுத்து பானட்டின் உள்பகுதி மற்றும் சக்கர வளைவுப் பகுதி போன்ற இடங்களை சுத்தம் செய்யும்போது நீர் வெளியேறும் அழுத்தத்தை கொஞ்ச‌ம் கூட்டிக் கொள்ள‌லாம். 

அதிக அழுத்தத்தில் தண்ணீர் வெளியேறும்போது அழுக்குகள் போய்விடும். கீழ்ப் பகுதியை வாஷ் செய்யும் போது அழுத்தத்தை இன்னும் கொஞ்ச‌ம் கூட்டிக் கொள்ள‌லாம். ஏனென்றால் இவ்விட‌ங்க‌ளில் சேறு அதிக‌மாக‌ காண‌ப்ப‌டும். அழுத்தத்தை இன்னும் கொஞ்சம் கூட்டும் போது சேறு சுலபமாக போய்விடும். அடுத்து டோர் ஹிஞ்சஸ் மற்றும் டிக்கி ஹிஞ்சஸ் போன்ற இடங்களில் வாஷ் செய்யும் போது பிரசரை கொஞ்ச‌ம் குறைத்து கொள்ள‌லாம். 

ஏனென்றால் ஸ்பீக்கரில் த‌ண்ணீர் ப‌டாத‌வாறு பார்த்துக் கொள்ள‌ வேண்டும். த‌ண்ணீர் பட்டால் ஸ்பீக்கரில் பிரச்சி‌னைக‌ள் வ‌ர‌ வாய்ப்புக‌ள் உள்ள‌ன‌. அடுத்து காரின் சில பகுதிகளை வாஷ் செய்யும் போது அழுத்தத்தை கொஞ்ச‌ம் குறைத்து கொள்ள‌ வேண்டும். ஏனென்றால் சில கார்களில் துரு ஏற்பட்டிருக்கும் அவ்விடத்தில் வாஷ் செய்யும் போது அது பெயர்த்து கொண்டு வந்து விடும். 

அடுத்து முன்பக்க கண்ணாடி, கதவு, ஜன்னல், கண்ணாடி ஆகியவற்றைக் கழுவும் போது குறைந்த அழுத்தத்திலேயே வாஷ் செய்ய வேண்டும். ஏனென்றால் கண்ணாடியில் அதிகமாக‌ அழுக்கு இருக்க வாய்ப்புகள் இல்லை. கழுவிய பின்பு உலர்ந்த துணியால் காரின் வெளிப்பகுதி மற்றும் கண்ணாடி பாகங்களை நன்றாக துடைத்து விட்டு சுத்தம் செய்த பிளோர் மேட்டை காரின் உள்ளே போட்ட பின்பு அனைத்து கதவுகளுக்கும் கிரீஸ் போட வேண்டும். பேட்டரி இணைப்புகளுக்கு ஜெல்லி போடுவது நல்லது.

Post a Comment

Previous Post Next Post

Search here!