மருத்துவ படிப்பு இடஒதுக்கீட்டு விவரங்கள்
* 37 அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 5,175 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 781 இடங்களும், மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு 4,319 இடங்களும் வருகின்றன. இதில் 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டில் 324 இடங்களும் உள்ளன.
* 18 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 2,650 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒரு இடமும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,146 இடங்களும், மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு 1,503 இடங்கள் இருக்கிறது. இதில் 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டில் 113 இடங்கள் உள்ளன.
* 2 அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 200 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 30 இடங்களும், மாநில ஒதுக்கீட்டுக்கு 170 இடங்களும் உள்ளன. இதில் 13 இடங்கள் 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றன.
* 18 சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1,760 இடங்களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 635 இடங்களும், மாநில ஒதுக்கீட்டுக்கு 1,175 இடங்களும் உள்ளன. இதில் 84 இடங்கள் 7.5 சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றன. Source News
No comments:
Post a Comment