அறிந்துகொள்வோம் C-DAC - முதுநிலை டிப்ளமா படிப்புகள் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 4 January 2022

அறிந்துகொள்வோம் C-DAC - முதுநிலை டிப்ளமா படிப்புகள்

C-DAC - முதுநிலை டிப்ளமா படிப்புகள் 

1988ல் நிறுவப்பட்ட இந்த, மேம்பட்ட கணினி வளர்ச்சி மையம், தொடர்ந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன்களை உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மற்றும் அதுசார்ந்த திறன் வளர்ப்பு பயிற்சிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வளாகங்கள்: 

பெங்களூரு, சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை, நாசிக், நவி மும்பை, நொய்டா, புதுடில்லி, கொல்கத்தா, பாட்னா, சில்ச்சர், புபனேஸ்வர், இந்தூர், ஜெய்ப்பூர், கராத், நாக்பூர், புனே. 

படிப்புகள்: 

பி.ஜி.டிப்ளமா இன் ஜியோஇன்பர்மேடிக்ஸ் 

பி.ஜி.டிப்ளமா இன் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் 

பி.ஜி.டிப்ளமா இன் பிக் டேட்டா அனலட்டிக்ஸ் 

பி.ஜி.டிப்ளமா இன் ஐ.டி., இன்பிராஸ்டர்க்சர், சிஸ்டம்ஸ் அண்டு செக்யூரிட்டி 

பி.ஜி.டிப்ளமா இன் இன்டர்டெட் ஆப் திங்ஸ் 

பி.ஜி.டிப்ளமா இன் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் 

பி.ஜி.டிப்ளமா இன் மொபைல் கம்ப்யூட்டிங் 

பி.ஜி.டிப்ளமா இன் அட்வான்ஸ்டு செக்யூர் சாப்ட்வேர் டெவெலப்மெண்ட் 

பி.ஜி.டிப்ளமா இன் எச்.பி.சி., சிஸ்டம்ஸ் அட்மினிஸ்டேரஷன் 

பி.ஜி.டிப்ளமா இன் எம்பெடெடடு சிஸ்டம்ஸ் டிசைன் பி.ஜி.டிப்ளமா இன் வி.எல்.எஸ்.ஐ., டிசைன் 

பி.ஜி.டிப்ளமா இன் ரோபாட்டிக்ஸ் அண்டு அலைடு டெக்னாலஜிஸ் 

தகுதிகள்: 

பொதுவாக, ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகிய இன்ஜினியரிங் பிரிவுகளில் எதேனும் ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எனினும், தேர்வு செய்யும் படிப்பை பொறுத்து கல்வித்தகுதிகள் மாறுபடும் மற்றும் கூடுதல் தகுதிகள் தேவைப்படும். தேர்வு செய்யப்படும் முறை: இந்நிறுவனம் நடத்தும் சி-சி.ஏ.டி., எனும் பொது மாணவர் சேர்க்கை தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

வேலை வாய்ப்பு: 

படிப்பின் நிறைவில் நேரடியாக நடத்தப்படும் சி.சி.இ.இ., எனும் பொது இறுதி தேர்வை அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும். வெற்றிகரமாக படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்பு பெறவும் இந்நிறுவனம் உறுதுணையாக இருக்கிறது. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 13, 2022 நுழைவுத்தேர்வு நடைபெறும் நாட்கள்: ஜனவரி 22 மற்றும் 23. விபரங்களுக்கு:www.cdac.in

No comments:

Post a Comment