JEE என்றால் என்ன? அதன் மூலம் என்னென்ன இலக்கை அடையலாம்? - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 18 January 2022

JEE என்றால் என்ன? அதன் மூலம் என்னென்ன இலக்கை அடையலாம்?

JEE என்றால் என்ன? அதன் மூலம் என்னென்ன இலக்கை அடையலாம்? 

ஜேஇஇ (JEE) எனப்படும் ‌ ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் என்ற இந்த தேர்வானது, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள B.E., B.Tech. போன்ற படிப்பில் சேருவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் என் டி ஏ (NTA) எனப்படும் தேசிய தேர்வு முகமை என்ற ஒரு அமைப்பால் நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இந்த என்டிஏ (National Testing Agency) என்பது தேசிய அளவிலான பொறியியல், மருத்துவம், பார்மசி, விவசாயம் ஆகிய படிப்புகளுக்கான பல்வேறு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 

ஜேஇஇ நுழைவுத்தேர்வு இதற்கு முன் சிபிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு வந்தது. தற்போது NTA என்ற அமைப்பு இத்தேர்வை நடத்துகிறது. இந்த ஜேஇஇ என்பது தேசிய அளவிலான மத்திய அரசின் உயர் கல்வி நிறுவ பொறியியல் கல்லூரிகளில் என் ஐ டி (National Institute of Technology, previously it was known as Regional College of Engineering), என்ஐ ஐ டி, (National Institute of of information Technology), ஐஐடி (Indian Institute of Technology) மற்றும் மத்திய அரசு நிதிபெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் (Centrally funded Technical universities ) உள்ள பொறியியல் படிப்புக்கான சேர்க்கை நுழைவுத் தேர்வாகும். இது ஆண்டும் தேர்வுகள் 4 முறை நடைபெறும் (2020 முதல்). இந்தத் தேர்வு JEE Main தேர்வு மற்றும் JEE Advanced தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. JEE தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை 

அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. NIT, IIIT போன்றவற்றில் சேருவதற்கு JEE Main தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால் IITயில் சேருவதற்கு JEE Main தேர்வு மற்றும் JEE Advanced தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் தேர்வுகள் நடைபெறும். இந்த நான்கிலும் அல்லது எழுதிய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் எது அதிகமோ அதை பயன்படுத்தி ஜேஇஇ அட்வான்ஸ்ட் எனப்படும் அடுத்த நிலைக்கு செல்லலாம். இந்த தேர்வு ஜேஇஇ முதல் நிலை மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ் என இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஜேஇஇ முதல்நிலை தேர்வில் வெற்றி பெறும் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE advanced) தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். 

இந்த JEE advancedல் வெற்றி பெறுபவர்கள் மட்டும் இந்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி (Indian Institute of Technology) எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பொறியியல் படிப்பை தொடர முடியும். JEE அட்வான்ஸ் தேர்வினை IIT மும்பை, IIT டெல்லி, IIT Guwahati, IIT கான்பூர், IIT கரக்பூர், IIT சென்னை, IIT ரூர்க்கி ஆகியவை கூட்டாக சேர்ந்து தேர்வினை நடத்துகிறது. இந்த ஐஐடியில் நான்காண்டு, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பொறியியல் படிப்புகள், நான்காண்டு மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தொழில்நுட்ப படிப்புகள் என மொத்தம் 106 வகையான பிரிவுகள் உள்ளன. ஜேஇஇ எக்ஸாமினேஷன் இந்த மெயின் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய உயர்கல்வி நிறுவனங்களான என்ஐடி(NIT) (நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி,) மற்றும் என்ஐஐடி(NIIT) எனப்படும் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனங்களிலும் மற்றும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் மத்திய அரசின் நிதி உதவியால் நடத்தப்படும் தொழிற்கல்வி நிறுவனங்களிலும் பொறியியல் படிப்பை மேற்கொள்ளலாம். இந்தக் கல்வி நிறுவனங்களில் நான்காண்டு பொறியில் படிப்பு அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த பொறியியல் படிப்பு அல்லது அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த பொறியியல் படிப்பை நாம் தொடரலாம். இதன் மூலம் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி உண்டு. 

JEE Advanced இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் தேசிய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி-யில் சேரமுடியும். இங்கு நான்கு ஆண்டு பொறியியல் படிப்பு மற்றும் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த பொறியியல் படிப்பு, மற்றும் நான்கு ஆண்டு தொழில்நுட்ப படிப்பு மற்றும் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப படிப்புகள் படிப்புகள் உள்ளன. 106 பிரிவுகளின்கீழ் இந்த பொறியியல் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி வழங்கப்படுகிறது. இந்த படிப்புகள் அனைத்தும் வளாகத் தேர்வில் வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அளிக்கும். இதில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கான உதவித் தொகையும் கிடைக்கும். பிற மேற்கத்திய நாடுகளில் இக்கல்வி நிறுவனங்களின் படிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஜெஇஇ மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஜெஇஇ மெயின் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் jeemain.nta.nic.in, என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு: http://www.nta.ac.in http://www.jeemain.ac.in  http://jeeadv.ac.in

No comments:

Post a Comment