TNPSC PRESS RELEASE DATE 07-01-2022
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு எண்:02/2022
நாள்: 07.01.2022
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் அதீத பரவல் மற்றும் ஓமைக்ரான்
வைரஸ் நோயினை கருத்தில் கொண்டும், தமிழக அரசினால் தற்போது,
மாநிலம் முழுவதும் 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு
அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், பொது போக்குவரத்து மற்றும் உணவிற்கான
வசதி இல்லாத சூழலில் தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில்
கொண்டும், இது குறித்து தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை
மனுக்களின் அடிப்படையிலும், 09.01.2022 முய மற்றும் பிய (ஞாயிற்றுக்கிழமை)
அன்று நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில்
அடங்கிய பதவிகளுக்கான (அறிவிக்கை எண்.16/2021, நாள் 20.10.2021)
எழுத்துத் தேர்வு மட்டும் 11.01.2022 அன்று மு.ப மற்றும் பிய நடைபெறும் எனத்
தெரிவிக்கப்படுகிறது.
2)
தேர்வர்கள் 09.01.2022 மு.ப மற்றும் பி.ப நடைபெறுவதாக இருந்த
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான
தேர்வுக்காக ஏற்கனவே பதிவிறக்கம் செய்த
நுழைவுச்சீட்டினையே
உபயோகித்து, 11.01.2022 மு.ப மற்றும் பி.ப அன்று நடைபெறும் தேர்வினை,
நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அதே தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத
அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
3) மேலும், 08.01.2022 மு.ப மற்றும் பி.ப நடைபெறவிருந்த தமிழ்நாடு நகர்
ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டிடகலை திட்ட உதவியாளர்
பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி அதே நாளில் நடைபெறும் எனத்
தெரிவிக்கப்படுகிறது.
திரு. கிரண் குராலா, இ.ஆ.ப.,
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
No comments:
Post a Comment