தினம் ஒரு தகவல் வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டியவை...! What to mention in the lease agreement ...! - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 2 January 2022

தினம் ஒரு தகவல் வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டியவை...! What to mention in the lease agreement ...!

சென்னை போன்ற நகரங்களில் சொந்த வீட்டில் வசிப்பவர்களைக் காட்டிலும் வாடகை வீட்டுவாசிகள்தான் அதிகம். வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் பல இடங்களில் முரண்பாடு இருந்து வருகிறது. 

எனவே இருவரும் ஒப்பந்த பத்திரம் எழுதிக்கொள்வது அவசியம். அதாவது வாடகை, பராமரிப்புத்தொகை, மின் கட்டணம், வெள்ளையடிப்பு செலவு, முன்பணம் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். பொதுவாக முரண்பாடு ஏற்படும்போது முன்பண தொகையை இருவரும் மாற்றிச் சொல்லக்கூடும். மேலும் வெள்ளை அடிப்பது எங்கள் பொறுப்பு இல்லை என வீட்டு உரிமையாளர் மறுக்கக்கூடும். வாடகைதாரர் வெள்ளையடிப்பு செலவை கொடுக்க வேண்டும் என்றால் அதை பத்திரத்தில் குறிப்பிட்டால் பிரச்சினை இல்லாமல் போய்விடும். 

வாடகை ஒப்பந்தப்பத்திரத்தை 20 ரூபாய் முத்திரைத்தாளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை விற்பனையாளரிடம் வாங்கி வாடகைதாரர் - உரிமையாளர் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நிரப்ப வேண்டும். இருவரின் நிரந்தர முகவரியும் அதில் குறிப்பிட வேண்டும். மேலும் இந்த ஒப்பந்தம் 11 மாதத்திற்குதான் போடுவார்கள். 11 மாதத்திற்கு ஒருமுறை அதை புதுப்பித்துக்கொள்ளலாம். 11 மாத காலத்திற்கு மேற்பட்டவற்றை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்பதால் வீட்டு வாடகைப்பத்திரங்கள் 11 மாத கால அளவில் போடப்படுகின்றன. 

வீட்டுக்கான வாடகை முன்பணத்தை பொறுத்தவரை அதற்கு ஒரு தெளிவான வரையறை இல்லை. அது ஒவ்வொரு நகரங்களுக்கும் வித்தியாசப்படுகிறது. சென்னையில் ஐந்து மாத வாடகையை அட்வான்சாக வாங்குபவர்களும் உண்டு. 10 மாத வாடகையை வாங்குபவர்களும் உண்டு. அதுபோல வாடகை கொடுக்கும்போது ரசீது பெற்றுக்கொள்வது அவசியம். இதற்கான ரசீது புத்தகங்கள் எழுதுபொருள் விற்பனை கடைகளில் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment