ராணுவ அமைச்சகம் தொடங்கும் 100 புதிய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கலந்தாய்வு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 7 February 2022

ராணுவ அமைச்சகம் தொடங்கும் 100 புதிய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கலந்தாய்வு

ராணுவ அமைச்சகம் தொடங்கும் 100 புதிய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கலந்தாய்வு ராணுவ அமைச்சகம், சைனிக் பள்ளிகளை நடத்தி வருகிறது. 

புதிதாக 100 சைனிக் பள்ளிகளை தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்துவதற்கான தானியங்கி முறை உருவாக்கப்பட்டு வருகிறது. இத்தகவலை ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. சைனிக் பள்ளி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘லிங்க்’ மூலம் மாணவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு மாணவரும் 10 பள்ளிகளை தங்கள் விருப்ப பட்டியலில் சேர்க்கலாம். மாணவரின் தரவரிசை மற்றுறம் விருப்பம் அடிப்படையில், தானியங்கி முறையில் அவருக்கான பள்ளி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த தகவல், ஆன்லைன் கலந்தாய்வு இணையதளத்தில் தெரிவிக்கப்படும். இத்திட்டத்தால் ஒளிவுமறைவற்ற மாணவர் தேர்வு நடக்கும் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது

No comments:

Post a Comment