வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கிடையாது மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் 100 சதவீத வருகை பதிவேடு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 7 February 2022

வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கிடையாது மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் 100 சதவீத வருகை பதிவேடு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவிப்பு

வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கிடையாது மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் 100 சதவீத வருகை பதிவேடு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பேரும் இன்று முதல் அலுவலகத்துக்கு நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார். வீட்டில் இருந்ந்து பணி நாட்டில் கொரோனா 3-வது அலை பரவத் தொடங்கியவுடன், கடந்த மாதம் 3-ந் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

 50 சதவீதம் பேர் மட்டும் அலுவலகத்துக்கு நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என்றும், மீதி 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 31-ந் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டது. பின்னர், இந்த நடைமுறை, பிப்ரவரி 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

 நேரில் வர வேண்டும் 

 இந்த நிலையில், நேற்று கொரோனா நிலவரம் குறித்த ஆய்வு கூட்டம் மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தலைமையில் நடந்தது. 

 அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜிதேந்திர சிங் கூறியதாவது:- 

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாதிப்பு விகிதமும் குறைந்துள்ளது. இதை கருத்தில்கொண்டு, மத்திய அரசு ஊழியர்கள் 7-ந் தேதி (இன்று) முதல் முழுமையாக பணிக்கு நேரில் வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

 விலக்கு கிடையாது 

அனைத்து மட்டங்களையும் சேர்ந்த ஊழியர்கள் எந்த விலக்கும் இன்றி வழக்கம்போல் அலுவலகத்துக்கு வர வேண்டும். இனிமேல் யாருக்கும் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கிடையாது. ஊழியர்கள் எல்லா நேரமும் முக கவசம் அணிவதையும், கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பதையும் துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment