பொதுத்தேர்வு எழுதிய 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நீட் கலந்தாய்வில் பங்கேற்க முடியுமா? தேசிய மருத்துவ கவுன்சில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

Saturday, 5 February 2022

பொதுத்தேர்வு எழுதிய 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நீட் கலந்தாய்வில் பங்கேற்க முடியுமா? தேசிய மருத்துவ கவுன்சில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் நீட் கலந்தாய்வில் பங்கேற்க முடியுமா? என தேசிய மருத்துவ கவுன்சில்u பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 

11-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் 

கேரளத்தைச் சேர்ந்த டி.ஜலாலுதீன் உள்ளிட்டோர் இது தொடர்பாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. 

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கெங்கேலே, நீட் கலந்தாய்வில் பங்கேற்கும் தனித்தேர்வர்கள்e 11-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை என ராஜஸ்தான், உத்தராகண்ட். இமாசல பிரதேசம், அசாம் ஆகிய மாநில அரசுகள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார். 

தகுதியில்லை... 

தேசிய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் கவுரவ் சர்மா, நீட் இளம்நிலை தேர்வு கையேட்டின் படி, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை திறந்தவெளி கல்விn முறை அல்லது தனியாக தேர்வு எழுதியவர்கள் நீட் தேர்வு எழுத தகுதியற்றவர்கள். 

மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் செய்முறை தேர்வுடன் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மத்தியd பிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள் தவிர்த்து ஏனையz மாநிலங்கள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய தனித்தேர்வர்களை நீட் தேர்வை எழுத அனுமதித்து வருகின்றன. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என வாதிட்டார். 

 8-ந் தேதிக்கு தள்ளிவைப்பு அப்போது நீதிபதிகள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் நீட் கலந்தாய்வில்t பங்கேற்க முடியுமா? என்பது குறித்து தெளிவான பதில் மனுவை தேசிய மருத்துவ கவுன்சிலில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment