நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு நடைபெறும் 19ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 9 February 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு நடைபெறும் 19ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு நடைபெறும் 19ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு 

செய்தி வெளியீடு எண் : 223 நாள்: 09.02.2022 

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல், 2022-க்கான, வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பது பற்றிய செய்தி வெளியீடு இம்மாநிலத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக) என மொத்தம் 648 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான (Ordinary Elections) வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்படி சாதாரண தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு 19.02.2022 அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. 2. இது தொடர்பான அறிவிக்கை 09.02.2022ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்படுகிறது. 

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், 
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியீடு: 
இயக்குநர், 
செய்தி மக்கள் தொடர்புத்துறை, 
சென்னை-9

No comments:

Post a Comment