சிவில் சர்வீசஸ் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-2-2022 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 12 February 2022

சிவில் சர்வீசஸ் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-2-2022

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் சிவில் சர்வீசஸ் (சி.எஸ்.பி.இ.) தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் மொத்தம் 861 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், 1-8-2022 அன்றைய தேதிப்படி 21 முதல் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

அதாவது 2-8-1990-க்கு முன்பாகவோ, 1-8-2001-க்கு பின்பாகவோ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. முதன் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-2-2022. மேலும் விரிவான விவரங்களை https://upsconline.nic.in/mainmenu2.php என்ற இணையப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment