திருப்பூர் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் உள்ள 353 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் இந்த வருடம் முதல் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தை செயல்படுத்த இந்த ஆண்டு 50 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வீதம் 5 பயனாளிக்கு ரூ.5 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அக்ரி கிளினிக், இயற்கை உரம் தயாரித்தல், மரக்கன்று உற்பத்தி செய்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், பசுமை குடில் அமைத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம் அமைத்தல், வேளாண் மருந்தகம் தொடங்குதல், நுண்ணீர் பாசன சேவை மையம் தொடங்குதல், வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்தல், வேளாண் தொழில் தொடங்க நிதியுதவி அளிக்கப்பட உள்ளது. 

இதில் பயன் அடைவதற்கு 21 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில் தொடங்கவிருக்கும் வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் விரிவான திட்ட அறிக்கையுடன் கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து வருகிற 5-ந் தேதிக்குள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!