கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 1 February 2022

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2021-22 கல்வி ஆண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்.சி. மற்றும் ஏ.எச்.), இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான பி.டெக் (உணவு தொழில்நுட்ப படிப்பு, கோழியின தொழில்நுட்ப படிப்பு, பால்வள தொழில்நுட்ப படிப்பு) ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புக்கு (கலையியல் பிரிவு) 22 ஆயிரத்து 240 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 21 ஆயிரத்து 899 பேர் தகுதி பெற்றுள்ளனர். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புக்கு (தொழிற்கல்வி) 248 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 245 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதேபோல பிடெக் (உணவு தொழில்நுட்ப படிப்பு, கோழியின தொழில்நுட்ப படிப்பு, பால்வள தொழில்நுட்ப படிப்பு) படிப்புக்கு 4 ஆயிரத்து 410 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 4 ஆயிரத்து 315 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த படிப்புகளுக்கு 26 ஆயிரத்து 898 பேர் விண்ணப்பம் அனுப்பி இருந்தனர். 

இதில் 26 ஆயிரத்து 459 பேர் தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல் 2-ந் தேதி (நாளை) வெளியிடப்பட உள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக இணையதளமான www.tanuvas.ac.in அல்லது www2.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் 2-ந் தேதி காலை 10 மணி முதல் காணலாம். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment