என்.எல்.சி.யில் அப்ரண்டீஸ் பயிற்சி - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 5 February 2022

என்.எல்.சி.யில் அப்ரண்டீஸ் பயிற்சி

என்.எல்.சி.யில் அப்ரண்டீஸ் பயிற்சி என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் என்ஜினீயரிங், டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு அடிப்படையில் அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பொறியியல், டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 2019/2020/2021-ம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். டிப்ளமோ, என்ஜினீயரிங் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். www.nlcindia.in என்ற இணைய தளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து நிரப்பி, 

பொது மேலாளர், 
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், 
என்.எல்.சி இந்தியா லிமிடெட், 
தொகுதி: 20, நெய்வேலி - 607 803 

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் பொறியியல் படிப்பு, டிப்ளமோ படிப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விரிவான விவரங்களை என்.எல்.சி. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 15-2-2022.

No comments:

Post a Comment