தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (நாட்டு நலப்பணித்திட்டம்) செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 11 February 2022

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (நாட்டு நலப்பணித்திட்டம்) செயல்முறைகள்

பள்ளிக் கல்வி மாணவ / மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மனுதாரரின் பெயர் தந்தை பெயர் /தாயார் பெயர்  முகப்பெழுத்து / பிறந்ததேதி திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே ஆய்வு செய்து அவர்கள் வழியாகவே அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்புவது குறித்து, அரசாணை  (அரசாணைநிலை எண்.177,நாள். 23.12.2021) பெறப்பட்டுள்ளமை - சார்பு. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (நாட்டு நலப்பணித்திட்டம்) செயல்முறைகள்



பார்வையில் காணும் அரசாணையில் மாணவ / மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மனுதாரரின் பெயர் /தந்தை பெயர் /தாயார் பெயர் / முகப்பெழுத்து / பிறந்ததேதி திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே ஆய்வு செய்து அவர்கள் வழியாகவே அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்பவும், அரசுத் தேர்வுத்துறை மூலம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்பு சார்ந்த மாணவ/மாணவியர்களின் இதர கல்விச் சான்றுகளில் பள்ளியில் திருத்தங்கள் மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களே ஆணை வழங்குவது குறித்தும் அனுமதி அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

எனவே மேற்காண் அரசாணை தக்க நடவடிக்கைக்காக மின்னஞ்சல் வழியாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது. மேலும், கருத்துருவினை பரிந்துரை செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும். 

இணைப்பு:

அரசாணை நகல் இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) பொ) 

பெறுநர் 

அனைத்து முதன்மைக்கல்வி அலுலர்கள்

No comments:

Post a Comment