வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகள்
நமக்கு முந்தைய தலைமுறையினர் வீட்டின் அருகே கிடைக்கும் குப்பைமேனி, துளசி போன்ற மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்தினர்.
இன்றைய கால கட்டத்தில் அழகுக்காக மட்டும் நாம் செடிகளை வளர்ப்பதற்குப் பதிலாக ஆரோக்கியத்திற்காகவும் வளர்க்கலாம்.
குறிப்பாக துளசி மிக முக்கியமான மூலிகைச்செடி.
கற்பூரவள்ளி, திருநீற்றுப்பச்சிலை, தூதுவளை, கற்றாழை, வெற்றிலைக்கொடி, ஆடாதொடா, தவசிக்கீரை, பசலை கீரைக்கொடி, அக்கிரகாரம், முறிகூட்டி எனத் தொட்டியிலேயே ஏராளமான செடிகளை வளர்க்கலாம்.
துளசியானது சளி போன்ற பிரச்சினைகளுக்கும், திருநீற்றுப்பச்சிலை, ஆடாதோடா இருமலுக்கும், சளி தொந்தரவுக்கும் அருமருந்தாகப் பயன்படுகிறது.
கற்றாழையின் மருத்துவ பயன்களுக்கு அளவே இல்லை.
மேலும் அக்கிரகாரம் வேர், பூ, இலை என எதாவது ஒன்றை மென்று முழுங்கினால் பல் சொத்தை, தொண்டை அலர்ஜி நீங்கும். முறிகூட்டி இலையை அரைத்துக் காயத்திற்கு மேல் பூசினால் விரைவாக குணம் கிடைக்கும்.
அழகுக்காக மணி பிளாண்ட் போன்ற செடிகளை வளர்ப்பதைவிட வெற்றிலைக் கொடியை வளர்த்துவர மருத்துவ குணமிக்க வெற்றிலையைப் பெறலாம். தூதுவளையின் மருத்துவ குணம் மிக அற்புதமானது. தூதுவளையைச் சட்டினியாகவோ ரசத்திலோ பயன்படுத்தினால் தைராய்டு பிரச்சினையை தடுக்கும் என சித்த மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment