அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குபவர்கள் முக்கியமாக நிலத்திற்கான ஆவணங்கள், கிரயப் பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல், அங்கீகாரச் சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ், சட்டவல்லுனர் ஒப்புதல் சான்று, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி ஆகியவை உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்ட இடத்திற்கான மண் பரிசோதனை, கான்கிரீட் பரிசோதனை சான்றிதழ்கள் உள்ளனவா என்பதையும் கவனமாக ஆராய வேண்டும்.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதன் தரம் உறுதியாக இருக்கிறதா என்பதே முக்கியம். வீடு வாங்கத் திட்டமிட்டுச் செல்பவர்கள், பொறியாளரை உடன் அழைத்துச் சென்று, கட்டிட அமைப்பு, கட்டுமான முறை, வீடு அமைந்துள்ள பகுதி என அனைத்தும் அறிந்துகொண்டு, வாங்குவது புத்திசாலித்தனம்.
எத்தனைத் தளங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற்றுக் கட்டப்பட்ட அடுக்கு மாடி என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும்.
சிலர் நான்கு மாடிகளுக்கு மட்டும் அனுமதி பெற்றுவிட்டு, ஐந்து, ஆறு என அடுக்கிக் கொண்டே போவார்கள். இவ்வாறு அனுமதியில்லாத மேல் மாடியில் வீடுகள் வாங்கிய பின், உள்ளாட்சி அனுமதியின்மையைக் காரணம் காட்டி, இடிக்க உத்தரவு வந்தால், வீடு வாங்கியவர்களே பாதிப்படைவார்கள். எனவே, அழகிய அடுக்கு மாடிக் குடியிருப்பு வாங்கும் ேபாது, அதில் உள்ள நிறை, குறைகளை ஆய்வு செய்து வாங்குவது அவசியம்.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ள இடத்திற்கு அருகில் மார்க்கெட், மருத்துவமனை, பள்ளி, கல்லுாரி, பஸ்நிலையம் உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா? எனப் பார்த்துத், தேர்வு செய்வது நல்லது.
No comments:
Post a Comment