விடுபட்டவர்களை சேர்த்து ஜிப்மர் மாணவர் சேர்க்கை பட்டியல் மருத்துவ கலந்தாய்வு கமிட்டி வெளியிட்டது - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 2 February 2022

விடுபட்டவர்களை சேர்த்து ஜிப்மர் மாணவர் சேர்க்கை பட்டியல் மருத்துவ கலந்தாய்வு கமிட்டி வெளியிட்டது

விடுபட்டவர்களை சேர்த்து ஜிப்மர் மாணவர் சேர்க்கை பட்டியல் மருத்துவ கலந்தாய்வு கமிட்டி வெளியிட்டது எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை மருத்துவ கலந்தாய்வு கமிட்டி நடத்துகிறது. 

புதுவை மாநிலத்தினை இருப்பிடமாக கொண்ட மாணவர்கள் பலர் இடஒதுக்கீட்டு பட்டியலில் விடுபட்டிருந்தனர். இதுதொடர்பாக புதுவை அரசு சார்பில் மருத்துவ கலந்தாய்வு கமிட்டிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இந்தநிலையில் ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை மருத்துவ கலந்தாய்வு கமிட்டி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment