தினம் ஒரு தகவல் காரை பார்க்கிங் செய்ய உதவும் நவீன கருவி - EDUNTZ

Latest

Search here!

Saturday, 5 February 2022

தினம் ஒரு தகவல் காரை பார்க்கிங் செய்ய உதவும் நவீன கருவி

பல்வேறு சவுகரியங்களைக் கருத்தில் கொண்டு வங்கியில் கடன் வாங்கி கார் வாங்கியவர்கள் நொந்து கொள்ளும் ஒரே விஷயம் குடும்பத்தினருடன் கடைகளுக்குச் சென்று நிம்மதியாக பொருட்களை வாங்க முடியாததுதான். 

காரை நிறுத்த உரிய இடத்தைத் தேடி அலைவதே பெரும் பிரச்சினையாக இருப்பதுதான் இதற்குக் காரணம். சென்னை போன்ற நகரங்களில் இந்தப் பிரச்சினை ஓரளவு சமாளிக்கும்படி இருந்தாலும், டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களில் உரிய பார்க்கிங் வசதி இல்லையெனில் அந்தப் பகுதிகளுக்கு காரில் செல்லவே பலரும் தயங்குகின்றனர். இதுபோன்ற பகுதிகளுக்கு சென்றுதான் ஆக வேண்டும் என்ற நிலை இருந்தால், அதற்காக சொந்த காரை விட்டு வாடகைக்காரில் செல்லும் குடும்பத்தினரும் உண்டு. 

காரை நிறுத்த உரிய இடம் தேடி குறைந்தது 5 கி.மீ. தூரமாவது பயணிக்க வேண்டிய நிலை இப்போது உள்ளது. இதற்கு இப்போது தீர்வு கண்டுள்ளது ஒரு வெளிநாட்டு நிறுவனம். அதாவது, அதிர்வலைகளில் செயல்படக் கூடிய கருவியை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இக்கருவி கார் நிறுத்துமிடங்களில் எந்தெந்த இடங்களில் இடம் காலியாக உள்ளது என்று துல்லியமாகக் காட்டும். 

இந்தக் கருவி இருந்தால் கார்களை நிறுத்த இடம் தேடி அலைய வேண்டியிருக்காது. இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். அத்துடன் கார் இயங்குவதால் வெளியாகும் கரியமில வாயு வெளியேற்றமும் குறையும். காரை எந்த இடத்தில் நிறுத்தினோம் என்று தேடி அலைவதும் குறையும். 

ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் காலியாக உள்ள இடத்தை காண்பிப்பதோடு அங்கு எவ்வித உரசலும் இன்றி காரை நிறுத்த இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது. ஜெர்மனியில் கடந்த ஆண்டு விற்பனையான 30 லட்சம் கார்களில் 18 லட்சம் கார்களில் இப்புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment