அரசுப்பள்ளி மாணவர்களை... ஆங்கில கவிஞர்களாக மாற்றும் ஆசிரியர்! - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 5 February 2022

அரசுப்பள்ளி மாணவர்களை... ஆங்கில கவிஞர்களாக மாற்றும் ஆசிரியர்!

அரசுப்பள்ளி மாணவர்களை... ஆங்கில கவிஞர்களாக மாற்றும் ஆசிரியர்! 

நிறைய மாணவர்கள் ஆங்கில மொழியில் பேச, எழுத அச்சப்படுகிறார்கள். 
தனியார் பள்ளி மாணவர்களுக்கே இந்த நிலை என்றால், அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில், தெலுங்கானா நிஜாமாபாத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் சந்திரசேகர், ஆங்கிலம் மீதான பயத்தை, தயக்கத்தை போக்க புதுமையான வழிமுறையை கையாண்டுள்ளார். 

அது என்ன தெரியுமா...? 

🟢அரசுப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் கவிதை எழுத வைப்பது. இதற்கு வழிகாட்டும் விதமாக, பிரத்யேக புத்தகம் eஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில் இலக்கண பிழை தவிர்த்தல், ஆங்கில அறிவை மேம்படுத்தும் வழிமுறைகள், மாதிரி கவிதைகள், கவிதை உருவாக்க நடைமுறைகள் போன்றவை எல்லாம் அடங்கி இருக்கிறது. 

இதுகுறித்து, அவர் பேசுகிறார். 

 🟢“ஆங்கில அறிவை வளர்க்க நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடிப்படை இலக்கணம் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றை மட்டும் மாணவர்கள் கற்றால் போதாது. 

🟢ஆங்கில திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தால், கவிதை எழுதும் பயிற்சியை முன்னெடுக்கd வேண்டும். என்னுடைய பள்ளியில் இந்த முயற்சியை முன்னெடுத்தோம். இன்றைக்கு தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் திறன் பெற்றவர்களாக எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களும் மாறியிருக்கிறார்கள். 

🟢சிறு கதைகள் மற்றும் பாடல்களை எழுத அவர்களை நான் ஊக்குவிக்கிறேன். இலக்கியத்தில் அவர்கள் கவனம் செலுத்தினால், அதுt அவர்களின் சொல்லகராதி, தகவல் தொடர்பு மற்றும்u படைப்பாற்றல் திறன்களை மேம்படுத்த உதவும். 2018-19-ம் ஆண்டில் 9-ம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தில் கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டினர். 

🟢அந்தக் கவிதைகள் உடனே தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் பிரசுரமாயின. 24 மாணவர்கள் மொத்தம் 72 ஆங்கில கவிதைகளை எழுதினர். இந்தக் கவிதைகள் புத்தகn வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். ஆங்கிலத்தின் மீதான பயத்தைப் போக்குவதே என்z நோக்கம். ஆங்கில கவிதைப் போட்டிகளில் பங்கேற்று எங்கள் மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் பலமுறை வெற்றி பெற்றுள்ளனர்” என்றார்.

No comments:

Post a Comment