DEE PROCEEDINGS | DATE : 15-02-2022 | பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒந்திவைக்கப்பட்டுள்ளதால் தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வு முன்கூட்டியே நிறைவு - திருத்திய கலந்தாய்வு அட்டவணை தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியீடு!!! - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 15 February 2022

DEE PROCEEDINGS | DATE : 15-02-2022 | பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒந்திவைக்கப்பட்டுள்ளதால் தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வு முன்கூட்டியே நிறைவு - திருத்திய கலந்தாய்வு அட்டவணை தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியீடு!!!

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. ந.க.எண். 756 / டி1/ 2021, நாள். 15.02.2022 

பொருள் : 

தொடக்கக் கல்வி - 2021-2022ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தமை - இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் மற்றும் பொது மாறுதல் திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியிடுதல் - சார்பு. 

பார்வை : 

1. அரசாணை (நிலை) எண்.176 பள்ளிக் கல்வி (ப.க5(1) துறை, நாள். 17.12.2021 2. பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் 
இதே எண்ணிட்ட நாள்.30.122021, 06.01.2022, 07.01.2022, 08.01.2022, 10.01.2022 20.01.2022, 21.01.2022, 22.01.2022 24.01.2022, 28.01.2022 மற்றும் 14.02.2022 3. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.756/டி1/2021, நாள். 06.01.2022 மற்றும் 14.02.2022 

பார்வை (1)ல் காணும் அரசாணையில் 2021 - 2022ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் மாறுதல், பணிநிரவல் மற்றும் பதவி உயர்வு சார்பாக பொது மாறுதல் கலந்தாய்வுக் கொள்கை வகுக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பார்வை (2)ல் காணும் செயல்முறைகளின் வாயிலாக பொது மாறுதல், பணிநிரவல் மற்றும் பதவி உயர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி ! ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு இணைப்பில் கண்டுள்ள திருத்திய கால அட்டவணையின்படி நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இவ்விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இணைப்பு : 

திருத்திய கலந்தாய்வு அட்டவணை 


பெறுநர் 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 
2 அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக) 
3. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக) நகல் - அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை-9 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்படுகிறது. 

நகல் - 
ஆணையர், பள்ளிக் கல்வி ஆணையரகம், சென்னை-6 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்படுகிறது. 
நகல் - மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-6 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்படுகிறது. 




No comments:

Post a Comment