தேர்வர்களுக்கு TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 2 February 2022

தேர்வர்களுக்கு TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தேர்வர்களுக்கு TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு எண்: 07/2022 நாள்: 01.02.2022 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது மேலும் தெரிவு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டும், போட்டித் தேர்வுகளை விரைவாக நிறைவுசெய்யும் வகையிலும், அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration - OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 ஆம் தேதிக்குள், தவறாமல் இணைத்து எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் 

மேலும், இது குறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால், 18004190958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி அல்லது helpdesk@tnpscexams.in/grievance.tnpsc@tn.gov.in GTGTM LOGOTGT (66F6U மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். கிரண் குராலா, இ.ஆ.ப., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்.

No comments:

Post a Comment