காலையில் உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். 

காலையோ அல்லது மாலையோ, தினமும் அரைமணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை நடைப்பயிற்சி செய்யுங்கள். 

காலை உணவை அரச விருந்து போல அதிகமாகவும், மதிய உணவை மிதமான அளவிலும், இரவு உணவை யாசகம் பெற்று சாப்பிடுபவர்களைப் போல குறைவாகவும் உண்ண வேண்டும். 

நிறைய தண்ணீர் அருந்துங்கள். 

பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிட்டு, இயற்கையான உணவு, பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். 

விளையாட்டுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவது அவசியம். 

தினமும் அரை மணி நேரமாவது, பாடபுத்தகம் அல்லாத புத்தகங்களை வாசிக்கப் பழகுங்கள். 

அன்றாடம் உங்களுக்கான வேலைகளை நீங்களே செய்யுங்கள். அது உங்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும். 

படிப்பு தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து, விளையாட்டு போன்ற அவசியமற்ற காரியங்களுக்கு செல்போனை பயன்படுத்தாதீர்கள். 

தினமும் ஒரு 10 நிமிடமாவது தனிமையில் இருந்து அமைதியை ரசியுங்கள். 

குறைந்தது 7 மணி நேரமாவது, தடையின்றி தூங்குங்கள். உடல் சுறுசுறுப்பாக இயங்க தூக்கம் மிகவும் அவசியம். -

த.மலர்வேணி, 9-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப்பள்ளி, மறைமலைநகர்.

Post a Comment

Previous Post Next Post

Search here!