‘ஜீவன் அக்‌ஷய்-VII', ‘நியூ ஜீவன் சாந்தி' திட்டம் திருத்தியமைப்பு எல்.ஐ.சி. அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 3 February 2022

‘ஜீவன் அக்‌ஷய்-VII', ‘நியூ ஜீவன் சாந்தி' திட்டம் திருத்தியமைப்பு எல்.ஐ.சி. அறிவிப்பு

எல்.ஐ.சி.யின் (ஆயுள் காப்பீட்டு நிறுவனம்) பென்ஷன் திட்டங்களான ‘ஜீவன் அக்‌ஷய்-VII' (திட்டம் எண் 857) மற்றும் ‘நியூ ஜீவன் சாந்தி' (திட்டம் எண் 858) ஆகியவற்றில் கடந்த 1-ந்தேதி முதல் ‘ஆன்யூட்டி' (ஒரே தவணை உடனடி பென்ஷன் திட்டம்) விகிதங்கள் திருத்தியமைக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டங்களின் மாற்றியமைக்கப்பட்ட ‘ஆன்யூட்டி' விகிதங்கள் இந்த மாதம் 1-ந்தேதி முதல் பெறப்படும் பாலிசிகளுக்கு கிடைக்கும். 

நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் உள்ள 2 ‘ஆன்யூட்டி' தேர்வுகளிலும் கிடைக்கும் தொகையை எல்.ஐ.சி. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ‘கால்குலேட்டர்' மற்றும் எல்.ஐ.சி. செயலிகளின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம். ‘ஆன்யூட்டி' விகிதத்தில் திருத்தம் செய்யப்பட்ட எல்.ஐ.சி.யின் ‘ஜீவன் அக்‌ஷய் VII' பாலிசியை நடப்பில் உள்ள விற்பனை வழிமுறைகளோடு எல்.ஐ.சி.யின் புதிய விற்பனை வழியான பொதுமக்கள் சேவை மையங்கள் மூலமும் பெறலாம். இந்த திட்டம் ஆன்லைன் மற்றும் சேவை மையங்கள் மூலமாக நேரடியாகவும் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு www.licindia.in என்ற வலைத்தளத்தை பார்க்கலாம் அல்லது ஏதேனும் எல்.ஐ.சி.யின் கிளையை தொடர்பு கொள்ளலாம். எல்.ஐ.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment