டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு கலெக்டர் தகவல் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 3 March 2022

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு கலெக்டர் தகவல்

டலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கு இலவச நேரடி பயிற்சி வகுப்பு நடத்தப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். 

 இதுதொடர்பாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

 வேலைவாய்ப்பு மையம் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட 2022-ம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலின் படி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் குரூப் 2-ஏ தேர்வு நடைபெற உள்ளது. 

 இப்பணி காலியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலமாக வருகிற 23-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில், அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடத்தப்படுகிறது. 

 பயிற்சி வகுப்பு இந்த பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நேரடி பயிற்சி வகுப்புகளாக மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது. எனவே இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து

No comments:

Post a Comment