மெலடோனின் பீனியல் சுரப்பியானது ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் உடலை தயார்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சூரிய ஒளி இருந்தால், மெலடோனின் சுரப்பு தடுக்கப்பட்டு, உடல் விழிப்பு நிலையில் இருக்கிறது. அதேநேரம் நீல நிற ஒளியாலும் மெலடோனின் சுரப்பு தடுக்கப்படுகிறது. முன்பெல்லாம் இரவு நேரத்தில் நாம் பயன்படுத்திய விளக்குகள் அனைத்தும் மஞ்சள் ஒளியை வெளியிட்டன. 

அதன் பின்னர் வந்த குழல் விளக்குகள் வெண்ணிற ஒளியை தந்தாலும், குறைந்த அளவே நீல ஒளியை வெளியிட்டன. இதனால் மெலடோனின் சுரப்பு குறையாமல் இருந்து வந்தது. தற்போது அதிகம் புழக்கத்தில் உள்ள எல்.இ.டி., அதிக நீல ஒளியை வெளியிடுகின்றன. 

இதனால் மெலடோனின் சுரப்பில் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு என, அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டாலும், கணினித்திரை, செல்போன் திரையில் இருக்கும் ஒளி உமிழிகளின் நீல நிற ஒளியும் பாதிப்பை ஏற்படுத்துமாம். மெலடோனின் இயல்பாக சுரந்து, ஒழுங்காக உறக்கம் வரவேண்டுமென்றால் உறங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் நீல ஒளியை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 

 அதேநேரம் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ெசல்ேபான், மடிக்கணினி அனைத்திலும் நீல ஒளியை குறைக்கிற அமைப்புகள் வந்துவிட்டன. ‘நைட் மோட்' என்று அழைக்கப்படும் அவற்றை பயன்படுத்தும்போது, திரை மெல்லிய சிவப்பு ஒளியுடன் தோன்றும். அதனால் நீல ஒளி தவிர்க்கப்பட்டு இயல்பான மெலடோனின் சுரப்புக்கு உடல் தயாராகும். கணினி, செல்போன்களில் அந்த அமைப்பு இல்லையென்றால், அவற்றுக்கான இலவச செயலிகள் இணையதளத்தில் உண்டு. அவற்றை பதிவிறக்கியும் பயன்படுத்தலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!